பிரதீப் குமார் தேவ்
பிரதீப் குமார் தேவ் P. K. Dave | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | எலும்பு அறுவை மருத்துவர் |
அறியப்படுவது | எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் |
விருதுகள் | பத்மசிறீ |
பிரதீப் குமார் தேவ் (Pradeep Kumar Dave) என்பவர் ஓர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார்.[1] பி. கு. தேவ் என்ற பெயராலும் இவர் நன்கு அறியப்படுகிறார். புது தில்லியில் அமைந்துள்ள ராக்லேண்டு மருத்துவமனைக்கு தலைவராகவும் இருந்தார்.[2] அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லியில் இளநிலை மருத்துவ பட்டம் பெற்றார். மேலும் இந்நிறுவனத்தில் மருத்துவப் பேராசிரியராகச் சேர்ந்து 2003ஆம் ஆண்டில் இயக்குநராக பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[2] பின்னர் பிரதீப் ராக்லேண்டு மருத்துவமனையில் எலும்பியல் துறையின் தலைவராக சேர்ந்து தற்போது மருத்துவமனை ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.[3]
இந்திய எலும்பியல் என்ற மருத்துவ ஆய்விதழின் முன்னாள் ஆசிரியராகவும், இந்திய முதுகெலும்பு அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[2] தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியராகவும் தேவ் இருந்தார்.[4] இசுக்கொட்லாந்து நாட்டிலுள்ள கிளாசுகோவில் இருக்கும் மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைக்கான ராயல் கல்லூரியின் கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்திய எலும்பியல் சங்கம், தேசிய மருத்துவ அறிவியல் கழகம், சர்வதேச மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் அனைத்துலக அறுவை சிகிச்சை கல்லூரியின் இந்திய உறுப்பினர் போன்ற பல்வேறு பொறுப்புகளை தேவ் வகித்துள்ளார்.[2] 2000ஆம் ஆண்டு சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் பிரதீப் செய்த சேவைகளுக்காக இந்திய அரசின் நான்காவது மிக உயர்ந்த குடியுரிமை விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr. Pradeep Kumar Dave's Profile". eMed World. 2015. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Dr. P K Dave". Credihealth. 2015. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
- ↑ "Brief profile". Rockland Hospital. 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Emeritus Professor" (PDF). NAMS. 2015. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
புற இணைப்புகள்
[தொகு]- "Padamshri Prof (Dr) P K Dave, Chairman Orthopaedics, Rockland Hospitals". YouTube video. BIG Idea - ZeeBiz. 10 March 2014. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.